திருத்தல வரலாறு

நமது ஸ்ரீ சந்தி வீரப்ப சுவாமி கோவில் முதன் முதலாக திரு. கோதண்டராம செட்டியார் வீட்டிற்கு கிழபுறம் இருந்தது. அதில்தான் முதலில் தீபம் போட்டு வழிபட்டு வந்தோம். அதன் பிறகு தற்போது உள்ள கோவிலை திரு. கருப்பன் செட்டியார் அவர்கள் வளையடுப்பில் தங்கி கோவிலை கட்டினார். அப்போது மழை இல்லாமையால் கோவில் வேலை ஆகாமலேயே இருந்ததாகவும், கோவில் வேலையை செய்ய முடியவில்லை. எனவே நான் ஊருக்குப் புறப்படுகிறேன், என்று வேண்டிய அன்றே மிகவும் பலத்த மழை பெய்ததாகவும் கருப்பன் செட்டியார் அவர்கள் வளையடுப்பில் தங்கி கோவிலை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

நாமும் பச்சை போடும் வரையில் முசிறியில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் சுவாமி கும்பிட்டு முசிறியில் உள்ள திட்டு சுவாமி கோவில் எனப்படும் கோவிலில் பூஜை செய்து திட்டு மண்ணை விபூதி பிரசாதமாக எடுத்து வெகு நாட்களாக பூசி வந்தோம். அதன்பிறகு பச்சை போட ஏற்பாடு நடந்தது. அதுசமயம் பச்சை போட நமது சுவாமி, ஆற்றில் தர்பைபில்லில் வந்து வாக்கு சொல்ல வேண்டும் என சேலம் திரு. K.V.A. முத்தழகன் செட்டியார் போன்ற முக்கியஸ்தர்கள் பரிசல் ஏறி குளித்தலை செல்லும் சமயம் பரிசலில் ஒரு பிராமணர் தர்ப்பையுடன் வந்து அமர்ந்தார். அவர் வைத்திருந்த தர்ப்பையிலிருந்து கௌலி சொல்ல பரிதாபி வருடம் மாசி மாதம் (10.3.73) தேதி நமது பங்காளிகள் முன்னிலையில் 20.4.73 முதல் 22.4.73 வரை பச்சை போடும் விழா நடந்தது. அதன் பிறகு நமது கோவில் புணருத்தனம் செய்து புதிதாக கட்ட ஈரோடு திரு. R. கிருஷ்ணசாமி செட்டியார், கோவை திரு. C. அருணாசல செட்டியார் அவர்கள் தலைமையில் நமது பங்காளிகள் கூட்டம் போட்டு கேரளா திரு. அச்சுதபணிக்கர் தலைமையில் நமது கோவிலில் பிரசன்னம் பார்த்து அதன்படி கட்டி முடிக்கப்பட்டு 9.7.2001 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

இன்றைய கால கட்டத்தில் உத்யோக விஷயமாக, குடும்ப சூழ்நிலை காரணமாக, மேற்படிப்பு விஷயமாக கிராமங்களில் வசித்து வந்த பல குடும்பத்தினர் சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுதில்லி என்று பல பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் ஆண்டிற்கு ஒருமுறை செய்ய வேண்டிய குலதெய்வ பூஜையை செய்ய முடியாத காரணத்தினால் பல வகையான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இன்னும் பல பேருக்கு குலதெய்வம் யார் என்று கூட தெரியாமல் வாழ்கின்றனர். தெய்வம் உண்டு. இந்த தெய்வங்களே ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைவேறும் சுப ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாரம்பரியமான, வம்சம் வம்சமாக ஒரு குல காரியங்களுக்கு அனுகூலம் செய்கின்றனர். மண், காற்று, நீர், அக்னி, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதே இந்த பூமி. நமது சொந்த கிராமமே நமக்குரிய பூமி தத்துவமாகும்.இந்த பூமியிலேதான் நமது முன்னோர்கள் வாழ்ந்து, மறைந்து பித்ருக்கள் ரூபமாக வாழ்கின்றனர். இந்த பூமியில் தான் நமது ஏற்று அருள் புரிந்து வருகின்றனர்.

குலதெய்வமும் கோவில் கொண்டு நமது வாழ்க்கையை காப்பாற்றும் கடமையை ஒவ்வொரு மனிதனுக்கும் தன் குடும்பத்தினருக்கு செய்யும் கடமைகளைப் போன்று இன்னும் மூன்று கடமைகள் உண்டு. அவை தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன். இந்த மூன்று கடமையை சரிவர செய்யாவிட்டால் நமக்கு எல்லா ஜன்மங்களிலும் நிறைய துன்பங்கள் வரும். இது “சஞ்சித கர்மா" முன்னோர்கள் செய்த வினை பரம்பரை பரம்பரையாக தொடராக வருவது. அடுத்து "பிராரப்த கர்மா" - நாம் 3 வயதிலிருந்து இந்த நிமிடம் வரை செய்யக்கூடிய வினையானது. இதனால் நிகழ்காலத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு "பிராரப்த கர்மா" இத்துடன் இந்த பிறவியில் நாம் செய்யும் பாவக் குவியல்கள் குடும்பத்தில் கலகங்கள், தடைகள், சண்டைகள், பிரிவுகள், துர்மரணங்கள், அகால மரணங்கள், பெரும் நோய்கள், சிறைச்சாலை வாசம் என்று பல கஷ்டங்களை உருவாக்குகின்றன. அடுத்து மூன்றாவதாக ஆகாமிய கர்மா. நம் ஆன்மாவானது இச்சை வயப்பட்டு, இனி செய்யப்போகும் வினை.

இப்படிப்பட்ட மூன்று கர்மாக்களினால் நம்மை தொடர்ந்து வரும் தீய வினைகளை அழித்து நம்மை காப்பாற்றி நல்வழி காட்டுவது நமது குல தெய்வ வழிபாடு, கூட்டு வழிபாடு ஆகும். ஆகவே நாம் நம் குலதெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும் சீரும் சிறப்புமாக பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

குலதெய்வ வழிபாடு கருத்து

நம் குல தெய்வம் என்பது வகுப்பாசிரியர் போன்றது. வகுப்பாசிரியர் மனது வைத்தால் தான் முடியும் நாம் பிரின்சிபால் மேலாளர், அதிகாரி இவர்களை சிபாரிசு பிடித்தாலும் கடைசியில் இவர்கள் வகுப்பாசியரின் கருத்து கேட்பார்கள். வகுப்பாசிரியர் ஒப்புதல் இல்லாமல் காரியம் முடியாது. அதைபோல் நாம் குல தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிற தெய்வங்கள் என வெங்கடாஜலபதி, முருகன், சிவன், லட்சுமி என்று எந்த தெய்வத்திற்கு நேர்ந்தாலும், இவர்கள் நம் குல தெய்வ வழிபாடு (வகுப்பு ஆசிரியர்) எவ்வாறு என அறிந்து விட்டுத்தான் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

தொடர்புக்கு

ஸ்ரீ அருள்மிகு சந்திவீரப்ப சுவாமி திருக்கோயில்

முகவரி

வளையெடுப்பு, முசிறி

மின்னஞ்சல்

info@srisanthiveerappaswamy.com
contact@srisanthiveerappaswamy.com

அழைப்புக்கு

+91 94861 58563
+91 76392 92078

Loading
Your message has been sent. Thank you!