காணிக்கை
மாவளி மகரிஷி கோத்திர பங்காளிகள் இருபாலர் சான்றோர் பெருமக்களே!
வாழ்க வையகம்
வணக்கம்
ஆண்டு தோறும் நமது திருக்கோவிலில் நடைபெறும் ஆடி18, புரட்டாசி மாதத்தில் நடைபெறும் மாயார் பூஜை, மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜை, ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டுவிழா வழிபாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
தங்கள் குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் நடந்தால் திருக்கோவிலுக்கு ரூ.1000/- காணிக்கை கொடுங்கள். தங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் சாமி உண்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி உண்டியலை பூஜை அறையில் வைத்திருந்து சாமி கும்பிடும்பொழுது தாங்கள் விரும்பும் ஒரு சிறு தொகையினை தவறாமல் செலுத்தி வாருங்கள். சாமி உண்டியல் நிரம்புவது போல் தங்கள் வாழ்க்கையில் எல்லா நலன்களும் நிரம்பி வழியும்.
தங்கள் குடும்பத்தில் ஆணோ, பெண்ணோ நன்கு படித்து வேலையில்சேர்ந்தால் முதல் மாத ஊதியத்தை திருக்கோயிலுக்கு காணிக்கையாக கொடுங்கள். திருககோயிலின் பணிகளை செவ்வனே நடைபெற தங்களின் ஒத்துழைப்பினை பெரிதும் வேண்டுகிறோம்.
நமது திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் அதனை முழுமையாக மாற்றி புணருத்தாரணம் செய்ய முயற்சித்தபொழுது மேற்படி முயற்சிக்கு நமக்கெல்லாம் ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து நமது திருக்கோயில் புதுப்பொலிவுடன் முழுமையாக உருவாக்க பெருந்தணையாக இருந்த மரியாதைக்குரிய திருவாளர்கள் ஈரோடு திரு.R.கிருஷ்ணசாமி செட்டியர், கோவை திரு. C. அருணாசலம் செட்டியார் ஆகியோரின் பாதங்களுக்கு மலர்தூவி இக்கையேட்டினை காணிக்கையாக செலுத்துகிறோம்.
நல்லது நினைக்கின் நல்லது நடக்கும்
இறையுணர்வோடு இருத்தல்
நிறைவான வாழ்க்கைக்கு அடித்தளம்